சத்தியம் தொலைக்காட்சிக்கு ஒரு நீதி பாலிமருக்கு ஒரு நீதியா?- ஜவாஹிருல்லா கேள்வி!

சென்னை (21 ஏப் 2020): கொரோனா பாதிப்பு காரணமாக சத்தியம் தொலைக்காட்சி முடக்கப்பட்ட நிலையில் பாலிமர் தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்? என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை பாலிமர் தொலைக்காட்சி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அந்த தொலைக்காட்சி முடக்கப்படாதது ஏன்?

ஒரு ஊரில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அந்த ஊரையே முடக்கும் அரசு ஒரு தொலைக்காட்சியை விட்டு வைப்பது ஏன்? தனது பிடிவாதத்தால் ஆபத்தை ஏற்படுத்திவரும் பாலிமர் தொலைக்காட்சி கல்யாண சுந்தரம் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?

எடப்பாடி அரசின் தராசு முள் ஏன் பாலிமர் தொலைக்காட்சி பக்கம் சாய்கிறது? மேலிட எஜமானர் மீதான விஸ்வாசமா? அதை நெருங்க எடப்பாடி அரசுக்கு அச்சமா? என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹாட் நியூஸ்: