ரஜினிக்கு பாஜக இன்னும் ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை – ஜவாஹிருல்லா விளாசல்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க ரஜினிக்கு இன்னும் பாஜக ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஜனநாயக குரலை நெறிப்பது போல் உள்ளது. வண்ணாரபேட்டையில் போராட்டம் நடத்த முயன்ற போது வேறு இடம் தருவதாக போலிஸார் கூறிய வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த்திற்கு பா.ஜ.க. எழுதி தரவில்லை. அதனால் அவர் வாய் திறக்கவில்லை. அசாமில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் வசனங்களை வாசிப்பவராக தான் உள்ளார்.

சென்னையில் நடந்த சம்பவம் போல் தமிழக வரலாற்றில் இதுவரை போலிஸ் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில்லை. பெண்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளன. இந்த தாக்குதல் முலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்கள், பெண்கள் போலீசாரான் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு உள்ளனர். வீடியோக்களை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகள், போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...

வாரிசு குடும்பத்தில் விரிசலா?

சென்னை (23 ஜன 2023): நடிகர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் லடாய் என்பதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த லடாய்க்குப் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருப்பதாக...

மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வலுவடையும் மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜேஎன்யுவில்...