சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை புறக்கணிப்போம் – ஜவாஹிருல்லா அறிக்கை!

Share this News:

சென்னை (15 ஜன 2019): அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.

இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களை பற்றி தெரிவிப்பதற்காக சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் வரிசையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பதிவு கடிதத்தையும் சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவுவேடு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் 2010ல் அது நடைபெற்ற போது எந்தவொரு கடிதமும் வழங்கப்படவில்லை. இச்சூழலில் விஷமத்தனமான இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நடவடிக்கையை கண்டித்து அந்த வங்கியை அனைவரும் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply