சர்ச்சைக்குரிய கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்!

524

கள்ளக்குறிச்சி (18 ஜூலை 2022): மாணவி மர்மமான முறையில் இறந்த கள்ளக்குறிச்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்ற திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்ன சேலத்தில் சக்தி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, அங்கு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வன்முறையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த பள்ளியின் நிர்வாகிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் நெருக்கமான தொடர்பிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் 24ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் அங்கு நடத்தப் பட்டுள்ளது. இதில் விழுப்புரம், கடலுார், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற திடுக்கிடும் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்று பல முகாம்கள் இங்கு நடத்தப் பட்டுள்ளன. இதனால், காவல்துறையின் விசாரணை கோணம் மாறி வருகிறது.

இதற்கிடையே மாணவி மரணம் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.