ரஜினியிடம் ஆதரவு கோரும் கமல்!

புதுக்கோட்டை (30 டிச 2020): நண்பர் என்கிற முறையில் ரஜினியிடம் ஆதரவு கோரவுள்ளதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபட போவதில்லை என ரஜினி கூறியுள்ள நிலையில் கமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல் ஹாசன், “ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து பேசுவேன். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும். ரஜினி நலம் விரும்புபவர்களில் நானும் ஒருவன். நண்பர் என்பதால் தேர்தலில் ஆதரவு கோருவேன். ரஜினியின் முடிவு பாஜகவுக்கு ஏமாற்றமா என்ற யுகமான கேள்விக்கு நான் பதில் அளிக்க முடியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பவில்லை.

ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக் கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை; அனைவருக்கும் சொந்தமானது. நான் நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன்” என்றார்.

ஹாட் நியூஸ்:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அதிர்ச்சி!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம் பின்னணியில் சீன ஹேக்கர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் டெல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கம் தொடர்வதால் அங்கு பல்வேறு...

பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது. இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர்...

டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் – ஆம் ஆத்மி முன்னிலை!

புதுடெல்லி (07 டிச 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலின் முதல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கருத்துக்கணிப்பு முடிவுகள் கணித்தபடி ஆம் ஆத்மி கட்சியே முன்னேறி வருகிறது. ஆம் ஆத்மி 86 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும்,...