டாஸ்மாக்கை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி – கமல் அதிரடி கருத்து!

Share this News:

சென்னை (15 மே 2020): டாஸ்மாக்கை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், “உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.” என்று பதிவிட்டுள்ளார்.

 


Share this News: