பிரச்சாரத்தின்போது கமலை கிண்டலடித்த ரசிகர் மீது கமல் காட்டம்!

கோவை (21 மார்ச் 2021): கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசனை கிண்டலடிக்கும் வகையில் கேள்வி கேட்ட ரசிகர் மீது கமல் கடும் கோபமாக பேசினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று கோவை மாவட்டம், பீளமேட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் அவரை சதிலீலாவதி படத்தில் வரும் கோவை பாஷையில் பேசுமாறு கேட்டார். அதற்கு கமல்ஹாசன், “நான் இங்கு நடிக்க வரவில்லை. உங்களுக்கு அதுதான் வேண்டுமென்றால், யூடியுபில் அந்த சினிமா வரும் பாருங்கள். இங்கு எதிர் காலத்தை பற்றி பேச வந்திருக்கிறேன். என்னை இங்கு நடிக்க, பாட, டான்ஸ் ஆட சொல்லாதீங்க. அப்படி பாடனும் ஆடனும்னா டிக்கெட் வாங்குங்க” என்று காட்டமான பாணியில் பேசினார்.

ஹாட் நியூஸ்: