பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? : கனிமொழி பொளேர் கேள்வி!

Share this News:

சென்னை (04 ஜன 2022): பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் தீர்மானிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பெண் மட்டும் இடம் பெற்றுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,”தற்போது, ​​மொத்தம் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளனர்; ஆனால் நாட்டில் பெண்களைப் பாதிக்கும் மசோதாவை ஆய்வு செய்யும் குழுவிற்கு அரசாங்கம் 30 ஆண்களையும் ஒரு பெண் உறுப்பினரையும் தேர்ந்தெடுத்துள்ளது ஏன்?” என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் பெண்களின் உரிமைகளை ஆண்கள்தான் முடிவு செய்ய வேண்டுமா? பெண்கள் இன்னும் பார்வையாளர்களாகவே இருப்பார்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் குழந்தைத் திருமணத் தடை (திருத்த) மசோதாவை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக பாஜக எம்பி வினய் சஹஸ்ரபுத்தே உள்ளார். ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரான சுஷ்மிதா தேவ் மட்டுமே இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பெண் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply