குடியுரிமை சட்ட எதிர்ப்பு – கேரள முதல்வர் சென்னை வருகை!

651

சென்னை (21 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பங்கேற்கிறார்.

நாடெங்கும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

ஷஹீன் பாக்கை பின்பற்றி நாடெங்கும் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை, கோவை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதைப் படிச்சீங்களா?:  சிரமத்தை தவிற்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதளம்!

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், கேரள முதல்வர் பிணராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயண சாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.