தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரிக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (06 டிச 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது வரை தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், பொதுமக்கள் மட்டுமில்லாது, அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களையும் பாதித்துவருகிறது. இந்தியாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட பலரையும் கொரோனா வைரஸ் பாதித்தது.

தமிழகத்தைப் பொறுத்துவரை தற்போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 1,400-க்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் - முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்...

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல்...

55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு...