புதிய ஆளுநர்கள் நியமனம் -குஷ்பு கொந்தளிப்பு !

சென்னை (07 ஜுலை 2021): எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு இதில் பாகுபாடு இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார்.

கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் தற்போது கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மிசோரம் மாநில ஆளுநராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  ஆவின் பால் - ஊடகங்கள் மூலம் பரவும் தவறான தகவல்கள்!

ஹரியானா ஆளுநராக உள்ள சத்யதேவ் நாராயன் ஆரியா திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திரிபுரா ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் ஜார்க்கன்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் பிரதேச ஆளுநராக உள்ள பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய ஆளுநர்கள் பட்டியலில் ஒரு பெண் கூட இல்லை என்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் நியமனத்தில் ஏன் பாகுபாடு? என்பதாக ஜனாதிபதிக்கு குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.