பதில் சொல்லுங்கள் முதல்வரே – குஷ்பூ கேள்வி

சென்னை (12 ஜூன் 2021): “உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னியா?” என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஊரடங்கு, சில தளர்வுகளுடன் வரும் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுகுறித்து நடிகை குஷ்பூ ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்… “எல்லாவற்றையும்விட டாஸ்மாக் மிக முக்கியமானதா.. ஆஹா!! என்ன ஒரு சிந்தனை!! உங்களுக்கு வந்தா அது இரத்தம், எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி?? தயவுசெய்து எங்களுக்குப் பதில் சொல்லுங்கள் மாண்புமிகு முதல் அமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களே” என பதிவிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

பாஜகவில் விழும் அடுத்த விக்கெட் – நெருக்கடியில் அண்ணாமலை!

சென்னை (06 டிச 2022): பாமகவில் இருந்து சென்று பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் பாமகவில் இணையவுள்ளார். பாஜக செயல்பாடுகளில் கடுமையாக அதிருப்தி அடைந்ததால், தீவிர...

வங்கக்கடலில் புயல் சின்னம்!

சென்னை (06 டிச 2022): வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலைக்குள் புயலாக மாறும்...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று...