நடிகை ஐஸ்வர்யா ராயின் ரகசிய புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!

சென்னை (24 ஆக 2021): பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஐஸ்வர்யா ராய் கெட்டப் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலம் ஒர்ச்சாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , ஐஸ்வர்யா ராய் பச்சனின் கெட்டப் புகைப்படம் ஆன்லைனில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு அறிவித்தபடி, பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் – நந்தினி மற்றும் மந்தாகினி தேவி.என்கிற வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் வெளியான புகைப்படத்தில் , ஐஸ்வர்யா பிரகாசமான இளஞ்சிவப்பு பட்டுப் புடவையில் கனமான நகைகளுடன் இருப்பதைக் காணலாம். ரகசியமாக நடைபெறும் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஐஸ்வர்யா ராயின் கெட்டப் பும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, பொன்னியின் செல்வன் குழு மத்தியப் பிரதேசத்தின் ஓர்ச்சாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. சியான் விக்ரம் சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் தற்போதைய படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்: