நேபாள பிரதமரின் தகவலால் வெடித்த அயோத்தி விவகாரம்!

Share this News:

காத்மாண்டு (14 ஜூலை 2020): இராமன் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது; ராமர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் ஷர்மா ஒளி பேசிய கருத்து தற்போது பற்றி எரிகிறது.

அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

நேபாளத்தின் பால்மீகி ஆசிரமம்,மேற்கு பிர்குன்ஜ், தோரி-யில் அமைந்திருப்பதுதான் உண்மையான அயோத்தியா என்று நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில், நேபாள வெளியுறவுத்துற அமைச்சகம் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இராமன் குறித்த பிரதமர் ஷர்மா ஒளியின் கருத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் உள்ள அயோத்தியின் கலாசார மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த கருத்து வெளியிடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Share this News: