கொரோனா வார்டில் மலர்ந்த காதல் – ஆத்திரம் அடைந்த மருத்துவர்கள்!

சென்னை (14 ஜூன் 2020): “நாங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் உங்களுக்கு இப்போது காதல் கேட்குதா?” என கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு ஒரு இளைஞரும் ஒரு இளம் பெண்ணும் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போதே காதலும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டிருந்தது. இதனை அங்கிருந்த டாக்டர்கள், நர்சுகளுக்கு தெரிந்தும் எதுவும் கூறமுடியவில்லை.

இந்த நிலையில் தான் சிகிச்சையில் இருந்த இளம்ஜோடிகளை ஒருநாள் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், ஊழியர்கள் மருத்துவமனை முழுவதும் தேடி வந்தனர்.

அப்போதுதான் மருத்துவமனை வளாகத்தின் ஒரு மறைவிடத்தில் புதர் அருகே 2 பேரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்தனர். இதை பார்த்ததும் டாக்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். உயிரை பணயம் வைத்து உயிர்களை காப்பாற்றி கொண்டிருந்தால், இப்படி அஜாக்கிரதையாக இருக்கிறார்களே என்று சத்தம்போட்டனர்.

பின்னர் சிகிச்சை முடியும் வரை கொரோனா வார்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஹாட் நியூஸ்: