தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா? – அமைச்சர் பதில்!

463

சென்னை (12 டிச 2021): தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது மெகா தடுப்பூசி முகாமில், 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 83 புள்ளி 5 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 51 புள்ளி 3 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருப்பதாக கூறினார்.

மாநிலம் முழுவதும் 600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று கூறிய அவர், மக்களிடம் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

பெரும்பாலான மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் மக்களிடம் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், 10 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கு மேல் மக்களிடம் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் கூறினார்.