என்பிஆர் தமிழகத்தில் நிறுத்தி வைப்பு – அமைச்சர் உதயகுமார் தகவல்!

சென்னை (13 மார்ச் 2020): மத்திய அரசு இதுவரை தமிழக அரசின் கோரிக்கைக்கு பதிலளிக்காததால் என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், என்பிஆரை பழைய முறையில் அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் என்பிஆர் சட்டத்தை அமல் படுத்துவதில் இஸ்லாமியர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்போம், 3 கேள்விகள் இருக்காது, மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது.

நேற்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது மத்திய அரசுக்கு மாநில அரசு எழுதிய கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து மத்திய அரசு பதிலளிக்காத காரணத்தால் என்பிஆர் கணக்கெடுக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்: