அமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக!

சென்னை (08 ஜூலை 2020): தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகவும், மேலும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்: