இறப்பு விகிதத்தைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Share this News:

சென்னை (17 ஆக 2020): இறப்பு எண்ணிக்கையப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அனைத்து உயிரிழப்புகளுக்கும் கொரோனா காரணம் இல்லை. கொரோனா நோயாளிகளில் 10 சதவீதம் பேர் கூட வைரஸ் தாக்குதலால் உயிரிழக்கவில்லை என்பதால் இறப்பு எண்ணிக்கையை பார்த்து அச்சப்பட வேண்டாம் என கூறினார்.


Share this News:

Leave a Reply