மிஸ்வா அறக்கட்டளை சார்பாக குடியரசு தின தேசிய கொடியேற்ற நிகழ்வு

Share this News:

மேலக்காவேரி (26 ஜன 2022): 73 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மேலக்காவேரி மிஸ்வா அறக்கட்டளை சார்பாக மிஸ்வா மனிதம் கிளினிக் வளாகத்தில் தேசிய கொடியேற்ற நிகழ்வு, தொழிலதிபர் ஹோட்டல் பிரஸிடெண்ட் குழுமம் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் மறைந்த தியாகி மேலக்காவேரி அப்துல் வகாப் அவர்களின் பேரன் ஜனாப் ஜவஹர் அலி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மிஸ்வா தலைவர் மு.அப்துல் அஜிஸ் அவர்கள் வரவேற்புரையாற்றி, கொடி உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கராத்தே முஹம்மது ,யாஸ் ஏஜென்சீஸ் குடந்தை மீடியா ரபி, அப்துல் ரகுமான் மற்றும் பலர் குடியரசு தின உரை நிகழ்த்தினார்கள்.

அசினா ஜுபைதா, முகமது இப்ராஹிம், அஸ்பக்,ஆசிக் , முகமதுரசீன்,அஸ்பிகா ஆகிய மாணவ மாணவிகள், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் வரலாறுகளையும் இந்திய விடுதலைக்காக பாடுபட்டு உயிர் நீத்த விடுதலை வீரர்கள் குறித்தும் பேசினார்கள்.

நிகழ்ச்சியை கவிஞர் அய்யூப்கான் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் சவுதி அரேபியா ஜெத்தா தமிழ் சங்கத்தின் கலாம் இளந்தளிர் இயக்கம் மற்றும் மிஸ்வா சார்பில் பயன்தரும் பழ மரக்கன்றுகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கும், சிகிச்சை பெற வரும் பயனாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

கும்பகோணம் கிஸ்வா துணைச் செயலாளர் பஷீர் அகமது (TMB), பாசிலா நஜீர் அகமது, பைசல், பொறியாளர் மைதீன் பாட்சா, மிஸ்வா மனிதம் கிளினிக் மேலாளர் சாகுல் ஹமீது, தாரிக், செவிலியர்கள் ரோஸி, நந்தினி, கலைமுரசி
ஓவியர் ரபீக், சமூக ஆர்வலர் நஜி உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் : மு.அப்துல் அஜிஸ்


Share this News:

Leave a Reply