இந்திய அளவில் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்வு!

798

சென்னை (17 ஆக 2021): தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் சிறந்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா டுடேயின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கணக்கெடுப்பின்படி, சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு 42 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஒடிசாவின் நவீன் பட்நாயக் இரண்டாது இடத்தில் உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நவீன் பட்நாயக்கிற்கு 38 சதவீத ஆதரவும், பினராயி விஜயனுக்கு 35 சதவீத ஆதரவும் கிடைத்தன.

மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே மற்றும் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். உத்தவ் தாக்கரேவுக்கு 31 சதவீத ஆதரவு கிடைத்தது. மம்தா பானர்ஜிக்கு 30 சதவீத ஆதரவு கிடைத்தது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏழாவது இடத்தில் உள்ளார். யோகி 29% மக்களின் ஆதரவைப் பெற்றார். அசாம் முதல்வர் ஹிமாண்டா பிஷ்வா சர்மாவும் 29 சதவீத ஆதரவைப் பெற்றார். ஹிமாண்டா பிஷ்வா சர்மா ஆறாவது இடத்தில் உள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் 22 சதவீத ஆதரவைப் பெற்றனர். இருவருக்கும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 10 வது இடத்திலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 11 வது இடத்திலும் உள்ளனர். இருவருக்கும் 19 சதவீத ஆதரவு கிடைத்தது.

இந்த ஆய்வு அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகழ் குறைந்து வருவதால் பாஜக சோர்வடைந்துள்ளது.