திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் – மனித நேய மக்கள் கட்சி செயற்குழு தீர்மானம்!

405

சென்னை (22 டிச 2020): வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை வெற்றியடைய செய்வதற்கு அயராது பாடுபடுவோம் என்று தலைமை செயற்குழு தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து மமக செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு அடிமைச் சேவகம் செய்து மாநிலங்களின் உரிமைகளை காவு கொடுத்து வருகின்றது. அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது.

தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், தமிழக மக்களின் நலன்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கும் நல்லாட்சியை தமிழகத்தில் மலர வைப்பது காலத்தின் கட்டாயமாகும். எனவே வரும் 2021ல் தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றிபெற வைப்பதற்காக அயராமல் களப்பணியாற்றுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.