தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மாறிய வேட்பாளர் – காமெடி பீசான கமல்!

திருச்சி (23 மார்ச் 2021): திருச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் திமுகவுக்கு மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ம.நீ.ம மற்றும் அதன் கூட்டணியில் உள்ள சமக, ஐ.ஜே.கே கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் முரளி கிருஷ்ணன் திமுக -விற்கு மாறியுள்ளார்.

சமக சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சூழலில், நேற்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதோடு, தனது வேட்பு மனுவையும் அவர் திரும்பப்பெற்றார். ம.நீ.ம தலைவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதேநாளில் அப்பகுதியில் உள்ள கூட்டணிக்கட்சி வேட்பாளர் கட்சி மாறியுள்ளது அக்கூட்டணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்: