இப்போ ஏன் அங்கே போறாரு – கமல் மீது அதிருப்தியில் மநீம!

549

சென்னை (30 ஆக 2020): கமல் ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக செல்வது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. திமுகவுக்கு ஐ-பேக்கும், அதிமுகவுக்கு சுனில் அன் கோவும் உள்ளது போல் கமல்ஹாசன் கட்சிக்கு சங்கையா சொல்யூசன்ஸ் என்ற தேர்தல் வியூக குழு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செல்வதால் சங்கையா சொல்யூசன்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.