மதுபான பிரியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான செய்தி!

சென்னை (18 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை நேரம் மாலை 5 மணி வரை இருந்த நிலையில், தற்போது இரவு 7 மணி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை நடந்துவரும் நிலையில், இரவு 7 மணி வரை விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கிற்கு முன்னதாக காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானக் கடைகள் இயங்கி வந்தது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மேலும் அதிகரித்திருப்பது மதுபான பிரியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது