அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

Share this News:

புதுடில்லி (14 அக் 2021):பாரத் பயோடெக்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு கோவாக்சின்’ தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 96.43 கோடி தடுப்பூசி ‘டோஸ்’கள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதற்கிடையே ‘சைடஸ் கேடிலா’ என்ற நிறுவனம் 12 – 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக ஊசியில்லா தடுப்பு மருந்தை தயாரித்துஉள்ளது.

இதை அவசர காலத்தில் பயன்படுத்த டி.சி.ஜி.ஐ. எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி அளித்தது.

இதேபோல் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை 2 – 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்தது.

இதற்கு அவசர கால அனுமதி வழங்க டி.சி.ஜி.ஐ.யிடம் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கான அனுமதி பெறும் நடைமுறை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.


Share this News:

Leave a Reply