ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா!

புதுடெல்லி (07 ஜூலை 2022): பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜ்யசபா பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ள நிலியில் ஒரு நாள் முன்னதாக, நேற்று அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்

இது குறித்த கூட்டத்தில், ஒரு அமைச்சராக நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நக்வி ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் மோடி நக்வியை பாராட்டினார். நக்வியுடன், ராம் சந்திர பிரசாத் சிங்கையும் பிரதமர் பாராட்டினார். இரண்டு ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது,

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

பிரதமர் மோடியின் பாராட்டு இது அவர்களின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. கூட்டத்திற்குப் பிறகு, முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சந்தித்தார்.