சாலையில் அனாதையாய் கிடந்த ரூ 11 லட்சம்!

சிதம்பரம் (05 ஏப் 2021): நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது.

இந்நிலையில் சிதம்பரம் தனி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எஸ்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வாழை தோட்டம் அருகே இளைஞர்கள் சிலர் நின்றிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய உடனே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது பாலிதீன் கவரில் பணம் கீழே கிடந்தது அதனை பறிமுதல் செய்து எண்ணிப் பார்த்தபோது அதில் 11,38,000 இருந்துள்ளது. அதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல ஒவ்வொரு பகுதியிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.