நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹாட் நியூஸ்: