தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு – எந்தெந்த கடைகள் செயல்படலாம்? – முழு விளக்கம்!

Share this News:

சென்னை (10 மே 2020): கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை முதல் 34 வகையான கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு திறக்க அனுமதித்த கடைகளின் விவரம் வருமாறு:
டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
உணவகங்கள் (பார்சல் மட்டும்)
பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்குக் கடைகள்

கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்

மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்
மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்

டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
பெட்டி கடைகள்
பர்னிச்சர் கடைகள்
சாலையோர தள்ளுவண்டி கடைகள்
உலர் சலவையகங்கள்
கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்

லாரி புக்கிங் சர்வீஸ்
ஜெராக்ஸ் கடைகள்
இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
நாட்டு மருந்து விற்பனை கடைகள்

விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
டைல்ஸ் கடைகள்
பெயிண்ட் கடைகள்
எலக்ட்ரிகல் கடைகள்
ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
நர்சரி கார்டன்கள்
மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
மரம் அறுக்கும் கடைகள்
சலூன்கள், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக்கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் / கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும், கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வரும் காலங்களில் பல்வேறு பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.


Share this News: