என்.வி.ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்!

668
Supreme court of India
Supreme court of India

புதுடெல்லி (06 ஏப் 2021): உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

அவர் இந்த மாதம் 24 ஆம் தேதி பதவியேற்பார். மே 23 அன்று ஓய்வு பெறும் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணாவை பரிந்துரைத்திருந்தார்.

என்.வி.ரமணன் ஆகஸ்ட் 27, 1957 அன்று ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பொன்னவரம் கிராமத்தில் பிறந்தார். ஏப்ரல் 27, 2000 அன்று ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக முதலில் நியமிக்கப்பட்டார். மே 10, 2013 அன்று, அவர் மீண்டும் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு பதவி உயர்வு பெற்றார்.

இதைப் படிச்சீங்களா?:  12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமைபப்டுத்தல் அவசியம் -தமிழக சுகாதாரத்துறை!

கிட்டத்தட்ட ஒரு வருடம் அங்கு பணியாற்றிய பின்னர், நீதிபதி ரமணா பிப்ரவரி 17, 2014 அன்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஏப்ரல் 24, 2021 அன்று ஓய்வு பெற உள்ளார்,