ஓமனிலிருந்து தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்!

சென்னை (07 மார்ச் 2020): ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது

நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு கூறியிருந்தது. எனினும் எச்சரிக்கையாகவே அரசு உள்ளது.

இந்நிலையில் ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: