தமிழகத்திற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

372

சென்னை (15 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.