அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு கால அட்டவணை வெளியீடு!

Share this News:

சென்னை (15 ஜூலை 2020): அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனி பாடம் நடத்தப்படவுள்ளது. அதேபோல 7.00 – 8.00 மணி வரை இயற்பியல் பாடமும் நடத்தப்படும் என கூறப்பட்டிருக்கின்றது. 8.00 – 8:30 மணி வரை 10ம் வகுப்பிற்கான தமிழ் பாடமும், 8:30 – 9.00 மணி வரை 10ம் வகுப்பு ஆங்கில பாடமும் நடத்தப்படவுள்ளது.

இதுபோன்று ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்று கொள்வதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீட் மற்றும் JEE ஆகியவற்றிற்கு தயாராகும் மாணவர்களுக்காக மாலை 7.00 – 8.00 மணி வரை வேதியியல், 8.00 – 9.00 மணி வரை விலங்கியல் என்று வகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தனித்தனியாக அரை மணி நேரம் என்பது பள்ளி மாணவர்களுக்காகவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு 1 மணி நேரமும் பட்டியலானது வகுக்கப்பட்டுள்ளது.


Share this News: