வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி – திமுக பங்கேற்பதாக தகவல்!

Share this News:

புதுடெல்லி (22 ஜூன் 2021): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 15 கட்சிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் திமுக பங்கேற்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இருமுறை சந்தித்து விதித்துள்ளனர். இதில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த ஆலோசனைக்குப் பிறகு சரத் பவாரும், அண்மையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த மூத்த அரசியல் தலைவர் யஸ்வந்த் சின்ஹாவும் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் என சுமார் 15 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், எத்தனை கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதேவேளை திமுக சார்பாக இக்கூட்டத்தில் திருச்சி சிவா பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply