Home தமிழகம் சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சென்னை (28 ஆக 2021): சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னை தானே நொந்து கொண்டார்.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார்.

அப்போது எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “வேளாண் சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு தருகிறதா? எதிர்க்கிறதா?” என்ற கேள்வியைக் கேட்டபோது, “இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்ததும் பதில் சொல்கிறேன்” என்று மழுப்பினார்.

இதைப் படிச்சீங்களா?:  வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - கனமழைக்கு வாய்ப்பு!

ஆனாலும் அதில் திருப்தியடையாத துரைமுருகன், “அதிமுக ஆட்சியின் போது, எத்தனை முறை ஒன்றிய அரசுக்கு வேளாண் சட்டங்கள் குறித்து கடிதம் எழுதப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் தவித்தார் ஓ.பி.எஸ். அதனை தனது பாணியில் வெளிப்படுத்தும் வகையில், “நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு; இரண்டுக்கும் நடுவில் இறைவனின் சிரிப்பு! இதுதான் என்னுடைய நிலைமை! இது, அவை முன்னவருக்குத் தெரியும்” என்று சொல்லி, தற்போதைய தனது சூழ்நிலையை வெளிப்படுத்தினார் ஓ.பி.எஸ்.

இதனையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கும் வகையில் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

உங்களுடன் வாசிப்பவர்கள்

போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் – பாஜக எம்பி குற்றச்சாட்டு!

லக்னோ (01 டிச 2022): போலி நெய்களை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது பாஜக எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன்...

தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

இந்து பெண்ணுடன் பேருந்தில் பயணித்த முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல்!

மங்களூரு (30 நவ 2022): ஒரு முஸ்லீம் இளைஞன் ஒரு இந்து பெண்ணுடன் பஸ்ஸில் பயணிப்பதைக் கண்டு பஜ்ரங் தள் தொண்டர்களால் தாக்கப்பட்டார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நந்தூர் அருகே இந்த சம்பவம்...

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக...