அம்மாவின் அரசியல் வாரிசு -அனல் பறக்கும் தேனி!

312

தேனி (05 அக் 2020): நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேனியில் நாளைய முதல்வர் ஓபிஎஸ் என 100 அடி நீளத்திற்கு பிளக்ஸ் அமைத்து அம்மாவின் வாரிசு என கோஷமிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சட்ட சபை தேர்தலையொட்டி அரசியல் வியூகங்கள் நகர தொடக்கி விட்டன. களத்தில் அதிமுகவா? திமுகவா? என்ற போட்டியை விட, அதிமுகவில் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற குழப்பங்கள் தொண்டர்களுக்கிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விடலாம் என்று கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. இருப்பினும் பரபரப்பானது ஓயவில்லை.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்புக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஓபிஎஸ் பதிவு செய்துள்ள ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதே தவிர, தீர்வை கொடுக்கவில்லை. கடந்த 2ம்தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த ஓபிஎஸ்ஐ அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். மேலும், அடுத்த முதல்வர் என்ற போஸ்டர்களும் தேனி முழுக்க ஒட்டப்பட்டு வருகின்றன.