பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்!

சென்னை (10 ஜூன் 2021): தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“2019 – 2020ம் ஆண்டு கல்வித்துறை அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் கல்வி அறிவு விகிதத்துறை வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த அறிக்கையின் படி இந்தியாவிலேயே கல்வித்தரத்தில் முதல் இடத்தில் உள்ள தமிழ்நாடு, A ++ கிரேட் பெற்றுள்ளது.

எனவே கல்வித் தரத்தில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பொது நுழைவு தேர்வுகளில் இருந்தும் விலக்கு தர வேண்டும். மேலும் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு உகந்த வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.”

இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...