தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

Share this News:

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது என்று ஓவைசிக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் “ஒவைசி நேற்று (திங்கட்கிழமை) சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையினடிப்படையில் தேர்தல் திட்டத்தை இறுதி செய்வதற்காக, அக் கட்சி ஜனவரி மாதம் திருச்சி மற்றும் சென்னையில் மாநாடுகளை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது

இதற்கிடையில், ஹாசன் திங்களன்று “நிச்சயமாக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று அறிவித்தார். “நான் போட்டியிடும் தொகுதி பற்றி பின்னர் அறிவிப்பேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வெற்றியை ஈட்டியுள்ள AIMIM கட்சியின் செல்வாக்கு தேசிய அளவில் உயர்ந்துள்ளது, அதேபோல ஐதராபாத் நகராட்சி தேர்தலிலும் 44 இடங்களைப் பெற்றது. அங்கு பாஜகவுக்கு கடுமையான நெருக்கடியை அக்கட்சி அளித்தது.

இது இப்படியிருக்க ஒவைசி அனைத்து முஸ்லீம் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவைசியின் கட்சி மக்கள் நீதி மயம் (கமலின் கட்சி), நாம் தமிழர் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் திட்டம் தீட்டி வருகிறது.

ஏற்கனவே கமல் ஹாசன் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் ஒவையின் கட்சி கமல் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நாட்டின் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே உண்மையில் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட வேண்டும் என்று கமல் ஹாசன் கூறியிருந்ததை உவைசி ஆதரித்து அறிக்கை விட்டிருந்தார். இவையெல்லாம் கமலுடன் உவைசி கைகோர்க்க வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்தியன் நேஷனல் லீக், மனிதநேய மக்கள் கட்ச்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, அகில இந்திய முஸ்லீம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பிற சில கட்சிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளன.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply