டெல்லி மக்கள் நகர்புர நக்சல் ஆகிவிட்டார்களா? – ப.சிதம்பரம் கேள்வி!

Share this News:

சென்னை (19 டிச 2019): டெல்லியில் இணையம் ஏன் முடக்கப் பட்டுள்ளது என்றும் மக்கள் நகர்புர நக்சல் ஆகிவிட்டார்களா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் நாடெங்கும் தீயாய் பரவியுள்ளது. மேலும் டெல்லியில் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.

அமைதியாக போராடிய மாணவர்களை அடக்க முயன்ற அரசு தற்போது நாடெங்கும் பரவியதால் பரிதவித்து நிற்கிறது. இந்நிலையில் டெல்லியில் இணைய சேவையை முடக்கி மொபைல் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்., ஏன் இணைய சேவை முடக்கப்பட்டது? டெல்லிவாசிகள் அனைவரும் நகர்புற நக்சலாகிவிட்டார்களா? மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடும் தருணத்தில், நாட்டில் அமைதியாக கூடி போராடும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply