சதமடிக்கும் பெட்ரோல் விலை!

சென்னை (01 அக் 2021): பெட்ரோல் விலை அக்டோபர் 1 முதல் மீண்டும் விலை உயர்க்கிறது.

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 99.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.74 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.36 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.45 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 99.58 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 94.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

ஹாட் நியூஸ்: