பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்வு – பொதுமக்கள் அவதி!

194

சென்னை (13 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இதைப் படிச்சீங்களா?:  தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இதேபோல டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 29 பைசா உயர்ந்து ரூ 87.85 லிருந்து. ரூ88.14 ஆகவும் டீசல் 35 பைசா அதிகரித்து லிட்டருக்கு 77.03 ரூபாயிலிருந்து78.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு. ரூ94.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ85.32 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.