தமிழறிஞர் அதிரை அஹமது மரணம் – பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல்!

சென்னை (30 மே 2020): தமிழறிஞர், தமிழ் மாமணி அதிரை அஹமது இன்று காலமானார். அவருக்கு பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறந்த எழுத்தாளரும் மிகச்சிறந்த பண்பாளருமான அதிரை அஹமது அவர்களின் மரணச் செய்தி மிக்க வேதனையளிகின்றது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் முதற்கொண்டு பல்வேறு புத்தகங்களை தமிழ் மக்களுக்கு தந்துள்ளார்.

நபி (ஸல்) வரலாறு, நல்ல தமிழ் எழுதுவோம், அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் ஆகிய நூற்கள் அவர் சிறந்த எழுத்தாளர் என்பதற்கான சாட்சிகளாகும். நபி (ஸல்) வரலாறு எழுதுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் 15 வருடங்கள். அதற்காக பல்வேறு புத்தகங்களை வாசித்தும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சென்றும் முழு ஈடுபாடோடு எழுதியிருக்கின்றார் என்பது ஆச்சரியமானது. இலக்கியச்சோலை வெளியீடான அப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பங்கெடுத்து புத்தகத்தை வெளியிடும் பாக்கியம் பெற்றிருந்தேன் என்பதனை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.

இதைப் படிச்சீங்களா?:  பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

சில காலம் பாக்கியாத்துஸ் சாலிஹாத் அரபி கல்லூரியில் தமிழ் ஆசிரியாராக சேவையாற்றியுள்ள அதிரை அஹமது அவர்களை தமிழ்மாமணி விருதும் கவுரவிக்க தவரவில்லை. இது அவரின் தமிழ் சேவைக்கு கிடைத்த கௌரவம்.

அவரின் மரணம் உண்மையில் வேதனையளிக்கிறது. அவர்களின் வாழ்வில் ஆற்றிய சேவைகளுக்கு மறுவுலக வாழ்வில் இறைவன் மகத்தான நற்கூலியை வழங்குவானாக. அவரை பொருந்திக் கொள்வானாக. அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும் இறைவன் அழகிய பொறுமையை தந்தருள்வனாக!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.