மீண்டும் நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு!-ஏராளமான மாணவர்கள் மறுபடியும் ஆப்சென்ட்!

Share this News:

சென்னை (28 ஜூலை 2020): 327 மாணவர்கள் தேர்வுக்கு வராமல் நேற்று பிளஸ் டூ மறு பொதுத்தேர்வு நடைபெற்றது.

பிளஸ்-டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள்(மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) மறுதேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

இந்நிலையில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 519 மாணவர்களில் 327 பேர் தேர்வுக்கு வரவில்லை.

இதற்கிடையே மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்படும். இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply