பிரதமர் மீண்டும் தமிழகம் வருகை – சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

221

சென்னை (25 பிப் 2021): தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்.

மாலையில் கோவை வரும் அவர், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார்.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் வருவதை அடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. lமாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக-பாஜக தலைவர்கள் கலந்து கொள்வதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.