திமுகவுக்கு வாக்கு சேகரித்த காடுவெட்டி குருவின் மகளிடம் பாமகவினர் வாக்குவாதம்!

Share this News:

அரக்கோணம் (29 மார்ச் 2021): அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகையை பாமகவினர் சிலர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தை நிறுத்தி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திரும்பிச் சென்றார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவர் சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, சோமனஅள்ளி, பூதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

மேல்கொல்லபட்டி கிராமத்தில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் பிரச்சாரம் செய்ய சென்ற போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வரிசையாக நின்று ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது இன்பசேகரனை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் அவரது மருமகன் மனோஜ் ஆகியோர் அப்பகுதி பெண்களிடம் வாக்கு சேகரித்தனர்.

அப்போது பேசிய குருவின் மகள், “எனது அப்பா வளரக்கூடாது என எப்படியாவது அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் பாமக நிறுவனர் ராமதாஸ் இருந்திருக்கிறார். எங்க அப்பா வளர்ந்தால் அவருடைய மகன் அன்புமணி வளர முடியாது. இதனால் அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருந்திருக்கிறார்” என்றார்.

எனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்கின்ற காரணத்தை வைத்து மருத்துவக் கொலை செய்து விட்டார்கள். எனது அப்பா 48 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது அந்த 48 நாட்களும் மயக்க ஊசி செலுத்தியே வைத்திருந்தனர். இதனால் தான் எனது அப்பா இறந்துவிட்டார். அவரை வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறோம் என கூறினோம். இதற்கு ராமதாஸின் ஆட்கள் வேறு எங்குள் அழைத்து செல்ல கூடாது என மிட்டினர் என்று குருவின் மகள் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனை எதிர்த்து பாமகவினர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகையை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Share this News:

Leave a Reply