ராகுல் காந்தி, ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை?

137

சேலம் (29 மார்ச் 2021): நேற்று ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது.

சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அணைத்து தலைவர்களுக்கும் கொரோன பரிசோதனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது.