சென்னையில் குறையும் ஆபத்து!

356

சென்னை (17 ஜூலை 2020): ‘சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறையும்’ என்று கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிக் காட்டி கணித அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ஒரு நபர் மூலம் எத்தனை நபர்களுக்கு தொற்று பரவுகிறது என்ற கணக்கெடுப்பை நடத்தி ஆர் வேல்யூ என்று மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, தொற்று பரவல் மதிப்பீடு 1%ல் இருந்து 0.78%ஆக குறைந்துவிட்டதை கணித அறிவியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு காணப்படும் என்றும் முன்பு போன்ற குறிப்பிட்ட இடம் மூலம் அதிகமாக பரவ வாய்ப்பு இல்லை என்றும் கணித அறிவியல் நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பு சென்னையில் 100 என்ற எண்ணிக்கைக்கு குறையும் போது மட்டுமே அதன் ஆபத்து முழுமையாக குறைந்துவிட்டதை உறுதி செய்ய முடியும் என்று தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.