சென்னையில் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

சென்னை (02 மே 2020): சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக்கோரி சென்னை கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போலீஸ் வாகன முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.