ராகுலுடன் ஒரே நாள் – ஓஹோவென பிரபலமான யூடூப் சேனல்!

521

சென்னை (30 ஜன 2021): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த யூடியூப் உணவு சேனலான கிராம சமையலுடன் இணைந்து உணவு சாப்பிட்ட வீடியோ அதி வேகத்தில் வைரலாகி வருகிறது,

தமிழககத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பலவேறு கிராம மக்களுடனும், விவசாயிகளுடனும் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் யூடூபில் கிராம சமையல் என்ற பெயரில் செயல்பட்டு வரும் யூடூப் சேனல் தயாரித்த காளான் பிரியாணியை உணவு தயாரிக்கும் குழுவுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதுதான் நேற்று மாலை முதல் டாக் ஆஃப்த நேஷன் ஆகி வருகிறது.

முன்னதாக ராகுல் அங்கு வருவதற்கு முன்பே அந்த கிராம குழுவினர் பிரியாணி தயாரித்து வைத்திருந்தனர். ஆனால் ராகு தானும் ஏதாவது இணைந்து செய்ய வேண்டும் என்றார். உடனே ராகுல் வெங்காயம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பிரியாணியின் ஒரு சைட் டிஷ் செய்தார்.

பின்னர் அவர் தரையில் விரிந்த ஒரு பாய் மீது அமர்ந்து அந்த கிராம மக்களுடன் உணவு சாப்பிட்டார். உடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ராகுல் அவர்களின் ஆசை எதுவும் ள்ளதா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் . உலகம் முழுவதும் சென்று உணவு இதேபோன்ற கிராமத்து உணவ்வு தயாரித்து வழங்க வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்று அவர்கள் கூறினர். உடனே ராகுல் அமெரிக்காவில் சாம் பிட்ரோடாவிடம் அதைச் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறினார், மேலும் குழுவிற்கும் உறுதியளித்தார்.

இதற்கிடையே வெளியான அந்த வீடியோவை ஒரு மணி நேரத்திற்குள் நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். சனிக்கிழமை காலை 9 மணி வரை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.